சுற்றுலா தலங்களில் ஒன்றான ஆழியார் அணை அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவிக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.
கரோனா காரணமாக கடந்த 9 மாதங்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் வால்பாறை, குரங்கு அருவிக்குச் செல்ல தடை விதித்தனர். தற்போது குரங்கு அருவிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
இது தொடர்பாக சுற்றுலா பயணிகள், ”குரங்கு அருவிக்கு செல்ல அனுமதி அளித்தது மகிழ்ச்சி. அதைப் போல ஆழியார் பூங்காவையும் விரைவில் திறக்க வேண்டும்”என்றனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் மூலமாக வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தகுந்த இடைவெளி, முகக்கவசம் போன்ற கரோனா விதிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: பூத்தது பூ ஒன்று: சேலத்தில் இரவில் மலர்ந்த அரியவகை பூ!