ETV Bharat / state

பறக்கும்படை சோதனை: 2 துப்பாக்கியும், ரூ.5 லட்சம் ரொக்கமும் பறிமுதல்!

கோவை: தொண்டாமுத்தூரில் நடந்த வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட தனியார் வங்கிப்பணம் ரூ.5 லட்சம் மற்றும் 2 பெரிய துப்பாக்கிகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தனியார் வங்கி பணம் ரூ.5 லட்சம், துப்பாக்கி பறிமுதல்
author img

By

Published : Mar 28, 2019, 3:01 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப்பணம், தங்கநகை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை வடக்கு தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராஜேஸ்வரி தலைமையில் காவல் துணை ஆய்வாளர் ஜோசப், தலைமை காவலர் ரங்கசாமி, ராஜேந்திர பிரசாத் ஆகியோர் வடவள்ளி- தொண்டாமுத்தூர் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் இரண்டு ஏர்கன்கள் இருந்தன. அந்த பணம் கணபதி பகுதியில் இருந்து இருட்டுபள்ளம் பகுதியில் உள்ள தனியார் வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்படுவதாக வாகனத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தனியார் வங்கி பணம் ரூ.5 லட்சம், துப்பாக்கி பறிமுதல்

பின்னர், அந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை வங்கி அதிகாரிகள் சமர்ப்பித்தனர். தற்போது இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சு.சீனிவாசன்.       கோவை

கோவையில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை
ரூ.5 லட்சம் பணம் மற்றும் இரண்டு ஏர்கன் பறிமுதல் 

 கோவை வடக்கு தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராஜேஸ்வரி தலைமையில் காவல் துணை ஆய்வாளர் ஜோசப்,  தலைமை காவலர்  ரங்கசாமி, ராஜேந்திரபிரசாத் ஆகியோர் வடவள்ளி- தொண்டாமுத்தூர் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வண்டியில் ரூ.5 லட்சம் பணம் மற்றும் இரண்டு ஏர்கன்கள் இருந்தன.

அந்த பணம் கணபதி பகுதியில் இருந்து இருட்டுபள்ளம் பகுதியில் உள்ள தனியார் வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்படுவதாக வாகனத்தில் இருந்தவர்கள் கூறினர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தற்போது அந்த பணத்திற்கான உரிய ஆவணத்தை வங்கி அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஏர்கன்கள் இரண்டும் உரிமம் பெறப்படாதவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.