ETV Bharat / state

பிளாஸ்டிக் தார் சாலை: மலேசியாவைத் தொடர்ந்து காங்கோ நாட்டோடும் ஒப்பந்தம் போட்ட கல்லூரி! - PLASTIC TAR ROAD PROJECT

பூடான், இந்தோனேசியா, மலேசியாவைத் தொடர்ந்து காங்கோ நாட்டோடும் பிளாஸ்டிக் தார் சாலை அமைக்க மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாக அக்கல்லூரியின் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

plastic tar road, Thiagarajar College of Engineering
தார் சாலை, மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி கோப்புப்படம் (Thiagarajar College of Engineering Website)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2024, 7:16 AM IST

மதுரை: பூடான், இந்தோனேசியா, மலேசியாவைத் தொடர்ந்து ஆப்பிரிக்க நாடான காங்கோ-வோடும் பிளாஸ்டிக் தார் சாலை அமைப்பதற்கு, மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அக்கல்லூரியின் வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் ராமலிங்க சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அதாவது, சாலை அமைப்பதற்கான முதன்மை மூலப்பொருளாகக் கருதப்படும் தாருடன், நெகிழிக் கழிவுகளையும் சேர்த்து அமைக்கப்படும் சாலைகள் மிகத் தரம் வாய்ந்ததாகவும், நீடித்து உழைக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளதை தங்களது ஆய்வின் மூலமாகக் கண்டறிந்து, அதனைச் செயலாக்கம் செய்து வருகின்றனர் மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரியின் வேதியியல் துறைப் பேராசிரியர்கள். இத்துறையின் வல்லுநரான பத்மஸ்ரீ டாக்டர் வாசுதேவன் நெகிழிக் கழிவுச் சாலைத் திட்டங்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டு வருகிறார்.

பிளாஸ்டிக் தார் சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்: இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மலேசியா நாட்டிலுள்ள அனைத்துச் சாலைகளையும் நெகிழி சாலைகளாக உருவாக்கம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியும், ரினர்ஜி பூமி என்ற மலேசிய நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளன. அதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்க நாடான காங்கோ-விலும் தார் சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெடுத்திடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து துறைப் பேராசிரியர் முனைவர் ராமலிங்க சந்திரசேகர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், "முனைவர் வாசுதேவன் அவர்களிடம் கடந்த 24 ஆண்டுகளாக நெகிழிக் கழிவு சாலை அமைக்கும் திட்டத்தில் பணியாற்றி வருகிறேன். இந்தியா முழுவதும் 3 லட்சம் கிலோமீட்டருக்கும் மேல் இந்தத் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நெகிழி சாலை: இந்தியாவிலுள்ள அனைத்து சாலை அமைக்கும் திட்டத்திலுள்ள அமைப்புகளும் நெகிழிக் கழிவு தார் சாலையை அமைத்து வருகின்றன. தேசிய கிராமச் சாலைகள் மேம்பாட்டு முகமை (என்ஆர்ஆர்டிஏ), பிஎம்ஜிஎஸ்ஒய் போன்ற திட்டங்களில் மட்டுமன்றி, கிராமப்புறங்களில் அமைக்கப்படும் சாலைகளில் 80 விழுக்காடு நெகிழிக் கழிவு சாலைகள்தான் அமைக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ள அரசாணையில் என்ஹெச்ஏஐ மூலம் அமைக்கப்படும் அனைத்து சாலைகளும் இனிமேல் நெகிழிக் கழிவு சாலைகளாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய நாட்டிற்கு மட்டுமன்றி, பிற நாடுகளுக்கும் நெகிழிக் கழிவுச் சாலை அமைக்க உதவி செய்து வருகிறோம். அந்த அடிப்படையில் பூடான், இந்தோனேசியா நாடுகளிலும் நெகிழி சாலை அமைத்து வருகிறோம்.

இதையும் படிங்க: சென்னை - பாலக்காடு ஐஐடிகளுக்கு இடையே மாணவர்கள் பரிமாற்ற திட்டம்! கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்

நெகிழியால் வரும் ஆபத்தை தடுக்க முயற்சி: அண்மையில் மலேசியாவிலுள்ள ரினர்ஜி பூமி என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக மலேசியா முழுவதும் நெகிழிச் சாலைகள் அமைக்க உள்ளார்கள். அதுமட்டுமன்றி, கடந்த 2 நாட்களுக்கு முன்பாக, ஆப்பிரிக்க நாடான காங்கோவின் இந்தியத் தூதர் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரிக்கு வருகை தந்து, நெகிழிச் சாலை குறித்து ஆர்வத்துடன் அறிந்து சென்றுள்ளார். அவர்களோடும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவிருக்கிறோம்.

மேலும் பல ஆப்பிரிக்க நாடுகளும் எங்களோடு தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டு வருகின்றனர். இந்தத் தொழில்நுட்பத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இந்த தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். நெகிழிக் கழிவுகளால் வருகின்ற ஆபத்தை இதன் மூலம் தடுக்கலாம் என்பது எங்களுடைய புரிதலாகும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.