கோவை : பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் முக்கோணத்தில் அதிமுக கட்சி அலுவலகத்தை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி திறந்து வைத்தார்.
பின்னர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படத்திற்கு முன்னாள் வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு குத்துவிளக்கு ஏற்றினார். அதைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் எம்எல்ஏ மனுக்கள் பெறப்பட்டது.
பின்னர்,வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி கூறுகையில், "ஆனைமலை சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் சாக்கடை வசதி, மின்சாரம்,சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஆனைமலை ஒன்றிய பொறுப்பாளர்கள் மா.சுந்தரம், அப்புச்சாமி கார்த்திகேயன், கோவை மாவட்ட இளைஞர்,இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் சாந்தகுமார், கம்பாலபட்டி ஊராட்சி தலைவர் ராஜ்குமார், கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.