ETV Bharat / state

திட்ட சாலை இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு என புகார்.. எம்.எல்.ஏ. தலைமையில் பொது மக்கள் மனு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 5:22 PM IST

Updated : Nov 27, 2023, 6:40 PM IST

Scheme Road Encroachment: கோவையில் அதிகாரிகளை ஏமாற்றி திட்ட சாலையை தனிநபர் ஆக்கிரமித்ததாக கூறப்படும் நிலையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரி பொது மக்களுடன் சேர்ந்து வந்து சட்டமன்ற உறுப்பினர் மனு அளித்தார்.

MLA and public petition to Collector to take action against who encroaching the scheme road Coimbatore
ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80வது வார்டு சுண்டக்காமுத்தூர் பகுதியில் இருந்து லாலா தோட்டம் செல்வதற்கு திட்ட சாலை ஒன்று உள்ளது. இந்தப் பகுதி கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. அதனை தனிநபர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பியதாக கூறப்படுகிறது.

போலி ஆவணங்களை தயாரித்து மாநகராட்சி ஆணையாளரையே ஏமாற்றி நம்ப வைத்து அந்த நபர் திட்ட சாலை இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்து உள்ளதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் கூறுகையில், "சர்வே ரெக்கார்டை மாற்றி தவறான ஆவணங்களை கொடுத்து முந்தைய மாநகராட்சி ஆணையாளரை ஆக்கிரமிப்பாளர் நம்ப வைத்துள்ளார். அங்குள்ள 30 செண்ட் நிலம் தற்பொழுதும் மாநகராட்சி ஆணையாளர் பெயரில் தான் உள்ளது. சுமார் பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை தவறான ஆவணங்களை கொண்டு அவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக" தெரிவித்தார்.

மேலும், தான் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், அப்பகுதி கவுன்சிலராகவும் இருந்தவரை அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று கூறினார். அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தவறான ஆவணங்களை கொடுத்து அரசாங்கத்தை நம்ப வைத்துள்ளதாக அவர் கூறினார். மேலும், அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எல்லாம் மாறியதால் அந்த இடத்தை மீண்டும் அடைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.

அந்தத் திட்ட சாலையை அடைத்தால் அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார். மேலும் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தான் ராஜ வாய்க்கால் சென்று சேரும் பகுதியையும் அடைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அப்பகுதியை சர்வே செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், தற்பொழுது உள்ள வருவாய் அலுவலர் தான் அப்போதைய காலத்தில் மாநகராட்சி துணை ஆணையாளராக இருந்ததாகவும், அவர்களுக்கும் இது பற்றி தெரியும் என்பதால் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் : அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த திமுக நிர்வாகிகள்!

Last Updated : Nov 27, 2023, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.