பொள்ளாச்சியில் திமுக அலுவலகத்தில் கோவை தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு சார்பில் 2021 சட்டப்பேரவை தேர்தல் ‘திமுக தலைவர் ஸ்டாலின் முதலைமைச்சராக தேர்தல் பணி’ என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஆதிதிராவிட நலக்குழு மாவட்ட அமைப்பாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் முன்னிலை வகித்து பேசுகையில், “அருந்ததியர் சமுதாயத்திற்கு 3% இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் மறைந்த முதலமைச்சர் கலைஞர். மண்டல கமிஷன் அறிக்கையின் மூலமாக தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை முன்னேற்ற அவர்களுக்கு பாதுகாவலனாக கலைஞர் இருந்தார். ஏழை எளிய மக்களுக்கு அவர் செய்த சாதனைகளை துண்டுப்பிரசுரங்கள் மூலமாக விநியோகித்து தேர்தல் பணியை தொடங்க வேண்டும்”. என்று கேட்டுக்கொண்டார்.