ETV Bharat / state

’உள்ளாட்சித் தேர்தலை நடைபிணமாக்கியவர் இந்த அமைச்சர்தான்’ - சண்முகசுந்தரம் எம்பி காட்டம் - உள்ளாட்சித் தேர்தலை நடைபிணமாக்கியவர் அமைச்சர் வேலுமணி

கோவை: உள்ளாட்சித் தேர்தலை சட்டபூர்வமாக நடைபிணமாக்கியவர் அமைச்சர் எஸ். பி. வேலுமணி என்று திமுக மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் விமர்சித்துள்ளார்.

minister velumani who corrupted local body election says k Shanmugasundaram MP
minister velumani who corrupted local body election says k Shanmugasundaram MP
author img

By

Published : Dec 24, 2019, 8:07 AM IST

கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குள்ளக்காபாளையம், குரும்பபாளையம், பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் வாக்கு சேகரித்தார்.

பரப்புரையில் பேசிய அவர், ” உள்ளாட்சித் தேர்தலை சட்டப்பூர்வமாக நடைபிணமாக மாற்றிவிட்டவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. அவர் தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும், தனது பணப்பெட்டியை நிரப்பிக் கொள்வதற்கும் மூன்றாண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடக்காமல் செய்தார். அவர் தேர்தல் காலங்களில் மட்டும் கிராமப்புற மக்களிடம் வந்து செல்கிறார்.

பரப்புரை மேற்கொண்ட சண்முகசுந்தரம் எம்பி

பொய் பரப்புரை மேற்கொண்டு கிராம மக்களை நம்பவைக்க அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. திமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் படித்தவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் என்பதால் அவர்களுக்கு வாக்களியுங்கள். திமுக ஆட்சிக் காலத்தில் கிராமப்புற மக்கள் வளர்ச்சி, அடிப்படை தேவைகள் ஆகியவை நிவர்த்தி செய்யப்பட்டது. ஆகவே கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயர திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.

இதையும் படிங்க: 'அதிமுக வென்றால் அடிப்படை வசதிகள் விரைந்து செய்து முடிக்கப்படும்...!'

Intro:mpBody:mpConclusion:உள்ளாட்சித் தேர்தலை சட்டபூர்வமாக நடைப்பிணமாக மாற்றியவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் குள்ளக்கா பாளையத்தில் தேர்தல் பரப்புரையின் போது குற்றச்சாட்டு

டிசம்பர் 23. கோவை புறநகர் தெற்கு மாவட்டம்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உட்பட்ட குள்ளக்காபாளையம், குரும்பபாளையம், பணிக்கம்பட்டி பகுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஊராட்சிமன்ற தலைவர் கார்த்திகேயனி நாகராஜன், மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் குழு உறுப்பினர் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் அப்போது கிராமம் மக்கள் திமுக நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பளித்தனர் இதனை அடுத்து பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்ளாட்சித் தேர்தலை சட்டபூர்வமாக நடைப்பிணமாக மாற்றியவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P. வேலுமணி என்றும் தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும் தனது பணப்பெட்டியை பெரிதாகி கொள்வதற்கும் மூன்றாண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடக்காமல் தள்ளிப் போனதற்கு காரணம் உள்ளாட்சித்துறை அமைச்சர் என்றும் தேர்தல் காலங்களில் மட்டும் கிராமப்புற மக்களிடம் வந்து செல்வதாகவும் அப்பொழுது இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கிராம மக்களை நம்பவைக்க கிராம மக்கள் முட்டாள்கள் அல்ல. திமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் படித்தவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் என்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி காலத்தில் கிராமப்புற மக்கள் வளர்ச்சிக்கும், அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யவும் பெரிதும் உதவியாக இருந்ததாகவும் ஆகவே கிராம புற மக்களின் வாழ்வதாரம் உயர திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார் அப்பொழுது மாநில விவசாய நெசவாளர் அணி செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் மருதவேல் உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.