தமிழ்நாடு முழுவதும் ஏழு இடங்களில் புதிதாக அரசுக் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதியளித்ததைத் தொடர்ந்து இந்தாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கோயம்புத்தூர் புலியகுளம் பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாநகராட்சி பெண்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (அக்.09) மாநகராட்சி பள்ளி வளாகத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையானது தொடங்கியது.
மாணவர்கள் சேர்க்கையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “கோவை மாவட்டத்தில் பல்வேறு சாதனைகளை அரசு செய்திருக்கிறது. விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், புதிய பாலங்கள், ஐந்து அரசுக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்த அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த சாதனைகள் தொடரும் முதல்கட்டமாக அரசு மகளிர் கல்லூரியில் ஐந்து பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. வரும் காலங்களில் கூடுதல் பாடப் பிரிவுகள் தொடங்கப்படும், தனியார் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் செலுத்திப் படிக்க தேவையில்லை. இந்த கல்லூரியில் மூலம் குறைந்த கட்டணத்தில் கல்வி பயில முடியும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன், கல்வித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வேட்டிய மடிச்சுக்கட்டி நாற்று நட்ட எஸ்.பி. வேலுமணி!