உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 97ஆவது பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ”விவசாயிகள் சிரமத்தில் இருப்பதை அறிந்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் 12 ஆயிரத்து 500 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்ததை நாங்களே எதிர்ப்பார்க்கவில்லை. ஒரு தலைவர் அறைக்குள் இருந்து கொண்டு வீரவசனம் பேசி வரும் நிலையில், கரோனாவிலிருந்து முதலமைச்சர் மக்களை காப்பாற்றியுள்ளார்.
70 ஆண்டுகால பிரச்னையான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்படும். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். வாழுகின்ற காமராஜர் என்றழைக்கப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாராயணசாமி நாயுடுவின் திட்டங்களை நிறைவேற்றுவார்” என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்வி கற்க உதவி கோரிய ஒடிசா மாணவி: 1 லட்சம் நிதியுதவி செய்த தர்மபுரி எம்பி