உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடசித்தூர், கப்பலங்கரை, கோவில்பாளையம், ராமபட்டினம், அம்பராம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், மக்களின் தேவைகளை நன்கு அறிந்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஐம்பதாண்டுகால வளர்ச்சியை 5 வருடத்திலே தந்துள்ளோம் - எஸ்.பி.வேலுமணி