கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நாகூர், ஜோத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் மக்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. மது அருந்துவதற்காக தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்குச் செல்வதால் விளைவுகள் ஏற்படுகின்றன.
இவற்றையெல்லாம் ஆராய்ந்து தான் முதலமைச்சர் தமிழ்நாட்டில் மதுபான கடைகளைத் திறக்க முடிவெடுத்துள்ளார். ஆளும் கட்சியினர் எதைச் செய்தாலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடிவருகின்றனர்.
மக்களுக்கு என்ன நன்மை செய்தாலும் போராட்டங்கள் நடத்தி, பிரச்னை செய்து அரசியல் ஆதாயம் தேடுவதுதான் எதிர்க்கட்சிகளின் வேலையாக உள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: 'மதுபான விலையேற்றத்தை விமர்சனம் செய்ய முடியாது' - அமைச்சர் செல்லூர் ராஜு