ETV Bharat / state

விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் பெரியசாமி - etv bharat

விவசாய கடன் சங்கங்களில் நடைபெற்றுள்ள விதி மீறல்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்
author img

By

Published : Jul 28, 2021, 9:15 PM IST

கோயம்புத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தலைமை தாங்கினார். அவருடன் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "கரோனா நிதி ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப்படாமல் இருக்கிறது. அது இந்த மாத இறுதிக்குள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர் கடன் கடந்த ஆண்டு ரூ.9,500 கோடி மட்டுமே வழங்கிய நிலையில், இந்தாண்டு ரூ.11,500 கோடி பயிர் கடனை வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் சேல்ஸ் மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. நியாய விலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். விவசாயிகளுக்கு எல்லா வகையிலும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும்.

கூட்டுறவு துறையின் மூலமாக செயல்படும் சுய உதவி குழுக்களின் எண்ணிக்கையினை 55 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் தவறுக்கு இடமளிக்காமல் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 4,451 விவசாய கடன் சங்கங்களில் நடைபெற்றுள்ள விதிமீறல்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. வரும் 31ஆம் தேதி அந்த ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் அதில் உள்ளவை குறித்து தெரிவிக்கப்படும்.

வேப்பம் புண்ணாக்கு தயாரிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தரமான விதைகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக ஒரே கூட்டுறவு சங்கத்தில் உள்ள பணியாளர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம்' - ஓ.பி.ரவிந்திரநாத்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.