ETV Bharat / state

விரைவில் கோவையில் முதலமைச்சர் - அமைச்சர் முத்துசாமி தகவல்

author img

By

Published : Jul 9, 2023, 8:27 AM IST

Updated : Jul 9, 2023, 9:35 AM IST

கோயம்புத்தூரில் முதலமைச்சர் விரைவில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார் எனவும், கோவை மாவட்டத்திற்கு சிறப்பு நிதியாக 200 கோடி ரூபாய் வழங்கியுள்ளார் எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

minister muthusamy
ஆலோசனை கூட்டம்
அமைச்சர் முத்துசாமி செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், எம்பி சண்முகசுந்தரம் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஓய்வூதிய திட்டம், விபத்து நிவாரணம், இலவச பட்டா, தையல் இயந்திரம் ஆகியவை 256 பயனாளிகளுக்கு அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை வேகப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். புதிதாக என்னென்ன திட்டங்கள் இங்கு சொல்லியுள்ளார்கள், அந்த துறை சார்பாக எழுத்துப்பூர்வமாக அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தினுடைய முன்னேற்றம் அடுத்த அடி எடுத்து உரைக்க வேண்டும் என அதிகாரிகள் மிகுந்த அக்கறையுடன் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையில் முதலமைச்சர் பல இடங்களில் ஆய்வுக்காக சென்றுள்ளார். அதேபோல கோவை மாவட்டத்திற்கும் வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஆய்வுக்கு வருகின்றபோது எந்தெந்த பணிகள் முடிக்க வேண்டுமெனவும், புதிய பணிகள் என்னென்ன தேவைப்படுகின்றன என்பதையும் கேட்கலாம் என்பதற்கான இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

கோவைக்கு சிறப்பு நிதியாக 200 கோடி ரூபாய் முதலமைச்சர் வழங்கி உள்ளார். அதில் 40 சதவீதப் பணிகள் நடைபெற்று வருகிறது. வீட்டு வசதி வாரியத்தில் பத்திரம் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் எடுக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்காமல் இருந்ததால் தாமதமானது. பணம் கட்டினால் உடனடியாக பத்திரம் கொடுக்கப்படும். மேலும், அதற்கான முகாம்களும் நடத்தப்படுகிறது” என்றார்.

மேலும், செல்வபுரம் பகுதியில் வீடு மோசடி குறித்து அமைச்சர் கூறுகையில், “அந்த விவகாரம் விசாரணையில் இருக்கிறது. மேலும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். தொடர்ந்து, கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் அரசு அலுவலர்கள் இல்லாமல் வேறு நபர் வாடகைக்கு உள்ளனர் என்ற கேள்விக்கு, “அதற்கு கண்டிப்பாக ஆய்வு செய்து, அதில் தவறு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அலுவலகம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் அவர்கள் இருக்க வேண்டும். வேறு யாருக்கும் வாடகை விடக்கூடாது. அதனை செய்தால் அது ரத்து செய்யப்படும்” என தெரிவித்தார்.

இதனையடுத்து, டாஸ்மாக் கடைகளில் அதிக பணம் வாங்குவது தொடர்பான கேள்விக்கு, “சில இடங்களில் டாஸ்மாக் கடைகளில் தவறு இருக்கலாம். அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். 500 கடைகள் மூடுகிறபோது கூட பக்கத்தில் வேறு கடை இருக்கிறதா என்பதை பார்த்துதான் மூடினார்கள். டாஸ்மாக் பார்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்கு முடிந்ததும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க: ‘டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதை தடுக்க நடவடிக்கை’ - அமைச்சர் முத்துசாமி!

Last Updated : Jul 9, 2023, 9:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.