கோவை மாநகராட்சி சார்பில் வ.உ.சி பூங்காவில் ரூ.23 லட்சம் மதிப்பில் புதுமைப்படுத்தப்பட்ட சறுக்கு விளையாட்டு மைதானத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி பேசுகையில், "கரோனா காலத்தில் அனைத்து இடங்களுக்கும் சென்று பார்வையிட்டவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. மற்ற மாநிலங்களில் கூட கட்டுப்படுத்தவில்லை. ஆனால் நம் தமிழ்நாட்டில் தான் கரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
விளையாட்டை பொருத்தவரை கோவை மாவட்டத்திற்கு பல திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம். கிரிக்கெட் மைதானம் ஒன்று மட்டும் கொள்கையாக உள்ளது. அதையும் கொண்டு வந்து விடுவோம். குழந்தைகளுக்கு என்ன வேண்டுமென்றாலும் செய்து தர அம்மாவின் அரசு நாங்கள் இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடையாறு கரைகளில் பூங்கா, விளையாட்டு மைதானம் அமைக்க மாநகராட்சி முடிவு