ETV Bharat / state

யானை தாக்கி வீடு இழந்த பெண்ணுக்கு அமைச்சர் நிதியுதவி - Minister sp velumani

கோவை: காட்டு யானை தாக்கி வீடு இடிந்த பெண்மணிக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி நிதி உதவி வழங்கினார்

velumani
velumani
author img

By

Published : Sep 22, 2020, 1:16 PM IST

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அவ்வப்போது பயிர்களை பயிர்களை சேதப்படுத்திவருகிறது. இந்த சூழ்நிலையில் நரசிபுரம் அருகே உள்ள சமணம்புதூர் பகுதியில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு புகுந்த காட்டு யானை அங்கு உள்ள பாப்பம்மாள் என்பவருடைய வீட்டை இடித்து சேதப்படுத்தியது.

திங்கள்கிழமை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவருடைய தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துவந்தார். அப்பொழுது யானை இடித்து சேதப்படுத்திய பாப்பம்மாள் என்பவருடைய வீட்டிற்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் சென்றார்.

அப்போது வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலையில் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து வனத்துறை அலுவலர்களிடம் காட்டு விலங்குகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு புகும் பட்சத்தில் அவற்றை தொடர்ந்து கண்காணித்து காட்டிற்குள் மீண்டும் விரட்டியடிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் மேலும் இதேபோல பொதுமக்களும் காட்டு விலங்குகளை துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் வனத்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.