கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சுவர் முறையாக இல்லை என்றும் இதுகுறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்காமல் விட்டதே இத்தனை பேர் உயிரிழந்திருப்பதற்கு காரணம் எனவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கொதிக்கின்றனர்.
இதனிடையே, அப்பகுதியில் இன்று காலை ஆய்வு மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், சம்பந்தப்பட்ட சுவரின் உரிமையாளர் இன்னமும் கைது செய்யப்படாமல் இருப்பது வெட்கக்கேடானது என்று காட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுவரின் உரிமையாளரும், தொழிலதிபருமான சிவசுப்பிரமணியம் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமுகை அருகே தனிப்படை காவல் துறையினர் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சருக்கு அச்சுறுத்தல்; எச்சரித்த உளவுத்துறை!