ETV Bharat / state

பாலியல் துன்புறுத்தல்: மலைவாழ் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை! - பொள்ளாச்சி அருகே பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை

பொள்ளாச்சி அருகே மலைகிராமத்தை சேர்ந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக எழுந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் துன்புறுத்தல்: மலைவாழ் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை!

author img

By

Published : Jan 7, 2022, 9:53 AM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே மலைவாழ் கிராமத்தில், கடந்த 1ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தகவல் வெளியானது.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் ஏற்கனவே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நேற்று (ஜன.6) சிறுமியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். இதுதொடர்பாக காவல்துறையனர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவள்ளூரில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: நால்வர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.