விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் பிகில். இந்த படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தில் போஸ்டர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசைவெளியிட்டு விழாவில் பேசிய விஜய்யின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் விஜய் கறிவெட்டும் கட்டை மீது கால் வைத்து போஸ் கொடுத்ததுள்ளது தங்களது தொழிலை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி இறைச்சி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, பிகில் படத்தின் போஸ்டர் இறைச்சி வியாபாரிகளை இழிப்படுத்தும் வகையில் உள்ளது. நாங்கள் தெய்வமாக நினைக்கும் கறிகட்டை மீது அவர் செருப்பு காலை வைத்து போஸ் கொடுப்பது மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும் கூறினர். மேலும் இது தொடர்பாக அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ்க்கு ஏஜிஎஸ் நிறுவனம் நியாயப்படுத்தி பதிலளித்து இருப்பதாகவும், இசை வெளியீட்டு விழாவில் தமிழக அரசிற்கு அறிவுரை கூறும் அளவிற்கு நடிகர் விஜய்க்கு தகுதியில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இறைச்சி வியாபாரிகளை இழிவுப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டுமெனவும், இல்லையெனில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமெனவும் கூறிய இறைச்சி வியாபாரிகள், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க:அடுத்த இளைய தளபதி இவர்தான் -ஆனந்த்ராஜ்