ETV Bharat / state

கோவையில் யானை தாக்கி தொழிலாளி பலி; பாதுகாப்பு வேண்டி பொதுமக்கள் கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 7:01 PM IST

Elephant Attack: கோவை அருகே ஆலாந்துறை அடுத்த மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை வனப்பகுதியில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானையை விரட்ட முயன்ற தொழிலாளி சண்முகசுந்தரம், யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

கோவையில் யானை தாக்கி தொழிலாளி பலி
கோவையில் யானை தாக்கி தொழிலாளி பலி

கோயம்புத்தூர்: கோவை ஆலாந்துறை அடுத்த மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை வனப்பகுதியில், தற்போது அதிக அளவில் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதாக வனத்துறையினர் அறிவித்திருந்தனர். கேரளா வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில், தண்ணீர் தேடி நாள்தோறும் ஏராளமான யானைகள் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து வருவதனால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் மதுக்கரை வனச்சரகம் கரடிமடை அடுத்த மூலக்காடு பகுதியில் நேற்று (அக்.11) ஒற்றை ஆண் யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகே உள்ள தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. இது குறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.

அப்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் தோட்டத்திற்குள் யானை புகுந்ததைப் பார்த்த தோட்டத் தொழிலாளி சண்முகசுந்தரம் என்பவர், யானையை விரட்ட முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது யானையை விரட்ட முயன்ற போது, சண்முகசுந்தரம் ஓட முடியாமல் கீழே விழுந்துள்ளார். அப்போது யானை தாக்கியதில் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட அருகில் இருந்தவர்கள், அங்கு வந்த சத்தம் எழுப்பி யானையை விரட்ட முயற்சி செய்தனர்.

அதைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டி சண்முகசுந்தரத்தின் உடலை மீட்டனர். பின்னர் உடற்கூராய்வுக்காக சண்முகசுந்தரத்தின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “தோட்டத்திற்குள் புகுந்த யானையை சண்முகசுந்தரம் விரட்ட முயற்சி செய்தபோது, யானை தாக்கியதில் சண்முகசுந்தரம் உயிரிழந்தார்.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக சண்முகசுந்தரம் இந்த தோட்டத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்தால், அதனை சுயமாக விரட்ட முயற்சி செய்யக்கூடாது. முதலில் வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். பின்னர் வனத்துறை ஊழியர்கள் அங்கு வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ளவார்கள்" எனத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வேளாண் துறை சார்ந்த சாதனை மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது - முதலமைச்சர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.