கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (36). இவருக்குத் திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். உணவகங்களுக்கு காய்கறி விற்பனை செய்து வந்த இவர், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் காய்கறி விற்பனை செய்ததில் கிடைக்கும் பணத்தை, ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டில் செலுத்தி ஆயிரக்கணக்கில் பணத்தை இவர் இழந்துள்ளார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலிலிருந்த கார்த்திக் நேற்று முன்தினம் (ஜூலை 31) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற செல்வபுரம் காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு