பேரூர் பகுதியில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தலைமையில் 16 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபருடன் ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஆறு மாதங்கள் ஆன நிலையில், அந்தச் சிறுமி கர்ப்பமானதை அடுத்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அங்கு இவரின் வயது 16 என்பதால் மருத்துவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போத்தனூர் காவல் துறையினர் சிறுமியை திருமணம் செய்தவர், அவரின் தாயார் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க... சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது!