கோவை மாவட்டம், பொன்னையராஜபுரம் பகுதியில் வசித்து வரும் 40வயது பெண், இரண்டு தினங்களுக்கு முன்பு குளித்து கொண்டிருந்தார். அப்போது செல்போன் மூலம் யாரோ ஒருவர் படம் பிடிப்பதை கண்டு கூச்சலிட்டார். பிறகு உடனே குளியல் அறையைவிட்டு வெளியே சென்று பார்த்தபோது சிலிண்டர் போடும் நபர் அங்கிருந்து வேகமாக வண்டியை எடுத்து செல்வதைப் பார்த்துள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த அப்பெண், சம்பவம் குறித்து தனது கணவரிடம் இன்று (அக்.16) கூறியுள்ளார். அப்பெண்ணின் கணவர் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பகுதியில் சிலிண்டர் போடும் நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பெயர் செல்வராஜ் என்பதும் வீட்டிற்கு சிலிண்டர் போட சென்றபோது, அப்பெண் குளித்து கொண்டிருந்ததாகவும், வேறு யாரும் இல்லை என்பதால் செல்போன் மூலம் படம் பிடிக்க முயன்றதாகத் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து செல்வராஜை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மூதாட்டியை கொன்று நாடகமாடிய வழக்கில் 5 பேர் கைது!