ETV Bharat / state

பொள்ளாச்சியில் குடிப்பதற்கு மது தரமறுத்த நண்பரை கட்டையால் தாக்கிய நபர் கைது! - Pollachi alcohol

Pollachi crime news: பொள்ளாச்சியில் குடிப்பதற்கு மது கொடுக்க மறுத்த நண்பரை சக நண்பரே கட்டையால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிப்பதற்கு மது தரமறுத்த நண்பரை கட்டையால் தாக்கிய நபர் கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 9:31 AM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பல்லடம் ரோடு, நந்தனார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வரும் இவருக்கு, கணேசன் என்ற நண்பர் இருந்துள்ளார். கணேசன் கோவை அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கணேசன் மணிகண்டனிடம் மது கேட்டுள்ளார். ஆனால், மணிகண்டன் மது தர மறுத்துள்ளார். இதனால் கணேசன் கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அப்பகுதில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக, மகாலிங்கபுரம் காவல் நிலைய காவல் துறையினர், நந்தனார் காலனி பகுதியில் உள்ள மணிகண்டன் கடையை அகற்றக் கோரி பொள்ளாச்சி நகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில், பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளும், மணிகண்டன் கடையை அகற்றக்கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

தன் கடையை அகற்ற கணேசன்தான் காரணம் என எண்ணிய மணிகண்டன், நேற்று முன்தினம் மாலை வேலை முடித்துவிட்டு வந்த கணேசனை, அருகில் இருந்த ரீப்பர் கட்டையை எடுத்து தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கணேசன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மேலும், இச்சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் காவல் துறையினர் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மார்கதர்சி சிட்பண்ட் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தடை - ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.