ETV Bharat / state

மகா சிவராத்திரி விழா:  இசை நிகழ்ச்சிகளுடன் களைக்கட்டிய ஈஷா யோகா மையம்

கோவை: நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளுடன் ஈஷா மகாசிவராத்திரி கோலாகலமாக நடைபெற்றது.

sivarathiri
மகா சிவராத்திரி
author img

By

Published : Mar 11, 2021, 10:39 PM IST

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் ஈஷா மகாசிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. மாலை 6 மணிக்கு லிங்க பைரவி தேவியின் ஊர்வலத்துடன் விழா இனிதே தொடங்கியது. தியான லிங்கத்தில் பஞ்சபூத க்ரியா நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர், விழா மேடையில் லிங்க பைரவி தேவிக்கு மஹா ஆரத்தி நடைபெற்றது.

தொடர்ந்து, சத்குரு பல லட்சக்கணக்கான மக்களுக்கு யோகா விஞ்ஞானத்தைப் பரிமாற உறுதி ஏற்கும் விதமாக மஹா யோக யக்ஞத்தை (வேள்வியை) ஏற்றி வைத்தார்.

yoga
தியான லிங்கத்தில் பஞ்சபூத க்ரியா நிகழ்ச்சி

பின்னர், விழா தொடக்கவுரை ஆற்றிய சத்குரு, “மகாசிவராத்திரி என்பது சிவனின் அருளைப் பெறுவதற்கு உகந்த ஒரு மகத்தான இரவாகும். இதை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அல்லது நம்பிக்கை சார்ந்த விழாவாகப் பார்க்கக் கூடாது. இன்று(மார்ச் 11) கோள்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக மனிதர்களின் உயிர் சக்தியானது இயற்கையாகவே மேல் நோக்கி நகரும். ஆகவே, இன்றைய இரவு முழுவதும் முதுகுத் தண்டை நேராக வைத்துக் கொண்டு விழிப்பாகவும் விழிப்புணர்வாகவும் இருந்தால் அளப்பரிய பலன்களைப் பெற முடியும். ஆரோக்கியம், நல்வாழ்விற்கு மட்டுமின்றி ஒருவரின் முக்திக்கும் இந்நாள் மிகவும் உறுதுணையாக இருக்கும்” என்றார்.

விழாவில் நம் இந்திய பாரம்பரியத்தை பறைச்சாற்றும் விதமாகவும், மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்திருக்கவும் பல்வேறு கலை குழுவினரின் இசை, நடன நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. குறிப்பாக, பிரபல தமிழ் நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாசனின் பாடல்களுடன், பறை இசைக்குழுவினரின் பறையாட்டம் அரங்கை அதிரச் செய்தது. இதுதவிர, பாலிவுட்டில் பிரபலமான கபீர் கஃபே குழுவினர், பின்னணி பாடகர் பார்த்திவ் கோஹில் குழுவினர் நடத்திய இசை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களைக் கவர்ந்தன. மேலும், சவுண்ட் ஆஃப் ஈஷா குழுவின் பாடல்களும், சம்ஸ்கிரிதி மாணவர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

sivarathiri
மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்

நள்ளிரவில் கண்ணைக் கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சியும் நடைபெற்றது. மேலும், விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக, பாரம்பரிய நாட்டு மாடுகளுக்குச் சத்குரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வழக்கத்திற்கு மாறாக, இந்தாண்டு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்பதிவு செய்த, மிக குறைவான எண்ணிக்கையிலான மக்களே விழாவில் நேரில் பங்கேற்றனர். அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதன் அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அரசின் வழிகாட்டுதல்படி பல்வேறு முன் திட்டமிடல்களுடன் விழா மிகுந்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: 'பாலியல் ரீதியான புகார்களை கூடுதல் கவனத்துடன் மாநில அரசு கையாள வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.