கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் கோட்டத்திற்குட்பட்ட அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கமுடியாத வழக்குகளாக நிலுவையில் இருந்த வழக்குகளை முடித்து வைக்க காவல்துறை சார்பில் இன்று (அக்.17) மகா பெட்டிசன் மேளா முகாம் நடத்தப்பட்டது.
அன்னூர் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த முகாமில் கடந்த மூன்று ஆண்டுகளாக தீர்க்க முடியாத பிரச்னைகளை சார்ந்த வாதி, பிரதிவாதி என இரு தரப்பினரும் அழைக்கப்பட்டனர்.
கருமத்தம்பட்டி டிஎஸ்பி சூரியமூர்த்தி, பயிற்சி டிஎஸ்பி சுனில் குமார் தலைமையில் நடத்தப்பட்ட இந்த முகாமில் தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிவில் வழக்குகள், குற்ற வழக்குகள் என அனைத்து மக்களுக்கும் இந்த முகாமில் தீர்வுகாண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழா : கொடியேற்றிய ஓ.பி.எஸ்!