கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாதர் சங்கத்தினர் திரண்டு நுண் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கரோனா ஊரடங்கின்போது மத்திய அரசு வங்கி, நுண் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன் தவணையை கட்டச்சொல்லி மகளிர் சுய உதவிக்குழுவினரை மிரட்டுவதாகவும்; ஆபாசமாகப் பேசுவதாகவும்; வீட்டிற்கே வந்து மிரட்டுவதாகவும் இது போன்ற நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்ததால் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.