கோவை மணியகாரன் பாளையத்தைச் சேர்ந்தவர் வெல்டர் குமார். அவர் மனைவி சங்கீதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சங்கீதா உடையம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். குமாருக்கும் அவர் மனைவி சங்கீதாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சங்கீதா குடியிருந்த வீட்டிற்கு பால் ஊற்ற வரும் பிரபு என்பவரிடம் நட்பு ஏற்பட்டுள்ளது. அது காதலாக மாறியுள்ளது. குமார் தினமும் குடித்துவிட்டு தன்னை கொடுமை செய்வதாக பலமுறை பிரபுவிடம் சங்கீதா கூறியிருக்கிறார். மேலும் சங்கீதா, பிரபு அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை முற்றி சங்கீதா மூன்று குழந்தைகளுடன் தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். கணவர் குமாரும் சண்டைகளை மறந்து ஒன்றாக வாழ பல முறை அழைத்திருக்கிறார். இதை சங்கீதா பிரபுவிடம் கூறியிருக்கிறார். மேலும் சங்கீதாவிற்கு குமாருடன் இணைந்து வாழ விருப்பம் இல்லாததால் பிரபுவுடன் இணைந்து குமாரை கொலை செய்ய திட்டமிட்டாள்ளார்.
அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை சங்கீதாவும், பிரபுவும் இணைந்து மணியகாரன் பாளையத்தில் உள்ள குமார் விட்டிற்கு சென்று குடிபோதையில் இருந்த குமாரை கத்தி வைத்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.
அதற்குள் குமார் சத்தமிட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்ததால் இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். அதன்பின் ரத்த காயங்களுடன் இருந்த குமாரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் தப்பி சென்ற சங்கீதா, பிரபுவை நேற்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தேசியத் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி பெண் நூதன முறையில் மோசடி!