கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சத்தியமங்கலத்திற்கு அரசுப் பேருந்து இன்று (டிசம்பர் 27) காலை 30 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஆலாங்கொம்பு என்ற இடத்தில் சென்றுகொண்டிருக்கும்போது காரமடை சாலையில் தூத்துக்குடியிலிருந்து கரி கட்டைகளை ஏற்றிவந்த சரக்கு லாரி எதிரே வந்த பேருந்து மீது வேகமாக மோதியது.
இதில் அரசுப் பேருந்து நிலைதடுமாறி சாலையோரம் பக்கவாட்டில் சாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த பயங்கர விபத்தில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் உள்பட எட்டு பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
மேலும், லாரி மோதிய வேகத்தில் அரசுப் பேருந்து அப்படியே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையோரம் இருந்த கடைகள் மீது சாய்ந்ததால், கடைகளும் பலத்த சேதம் அடைந்துள்ளன.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த எட்டு பேர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினர். இதனையடுத்து, காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டனர். இவ்விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், லாரி பேருந்து விபத்தின் Bus Accident CCTV காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thiruchendur temple anarchy: திருச்செந்தூர் முருகன் கோயிலில் தொடரும் உதவி ஆணையரின் அராஜகம்!