கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் என்பவர் பொன்னேகவுண்டபுதூர் கரோனா ஆய்வுப் பணிகளுக்காக உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கரோனா தடுப்புப் பணி மேற்பார்வையாளர்கள் ஏழு பேருடன் நான்கு சக்கர வாகனத்தில் அன்னூரிலிருந்து புறப்பட்டார்.
அப்போது அவர் சென்ற வாகனம் தெலுங்குபாளையம் அருகே எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த அவர், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சொர்ணவேலம்மாள், கீதாலட்சுமி, பணி மேற்பார்வையாளர் ராஜம்மாள், ஒட்டுநர் உட்பட அரசு அலுவலர்கள் எட்டு பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கபட்டு அனைவரும் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டனர். ஓட்டுநர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவல் துறை வாகனத்தை இடித்து நொறுக்கிய கனரக வாகனம் - 4 காவலர்கள் உயிரிழப்பு!