ETV Bharat / state

கவிழ்ந்த பெயிண்ட் லாரி... மலமலவென பற்றிய தீ... - தீப்பிடித்து எரிந்த லாரி

கோயம்புத்தூர் கருமத்தம்பட்டி மேம்பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த லாரி விபத்திற்குள்ளானதில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

lorry accident near karumathampatti  lorry accident  karumathampatti lorry accident  paint lorry accident  லாரி விபத்து  கருமத்தம்பட்டி லாரி விபத்து  தீப்பிடித்து எரிந்த லாரி  கருமத்தம்பட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி
கருமத்தம்பட்டி லாரி விபத்து
author img

By

Published : Apr 24, 2022, 10:14 PM IST

கோயம்புத்தூர்: ஹைதராபாத்தில் இருந்து பெயிண்ட் ஏற்றி வந்த லாரி கருமத்தம்பட்டி மேம்பாலத்தின் மேல் வந்து கொண்டிருந்த போது விபத்திற்குள்ளானதில் திடீரென தீப்பற்றியது. இதனை அறிந்த லாரியின் ஓட்டுநர் பிரவின் மற்றும் மற்றொருவர் லாரியிலிருந்து குதித்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

மேலும் விபத்துக்குள்ளான லாரியில் பற்றிய தீ, சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு பரவியதால், மேம்பாலம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக சூலூர் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

கருமத்தம்பட்டி லாரி விபத்து

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். சிறு காயங்களுடன் தப்பிய லாரியல் வந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற கருமத்தம்பட்டி காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால், கருமத்தம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: முகமூடி அணிந்து பட்டப்பகலில் படுகொலை செய்த மூன்று பேர் : காவல்துறை விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.