ETV Bharat / state

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை.. வெளியான முழு பட்டியல் - 5 தனிப்படை அமைத்து விசாரணை தீவிரம்! - Jewelery Looted in Jos Alukkas Jewelery Shop

Coimbatore Jos Alukkas Jewellery looted issue: நேற்று முன்தினம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை போன நகைகள் பட்டியல் வெளியீடு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 11:58 AM IST

கோயம்புத்தூர்: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் இருந்து தங்கம், வைரம், பிளாட்டினம் என மொத்தம் 200 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்திருக்கும் நிலையில், இது தொடர்பாக ஐந்து தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நான்கு தளங்கள் கொண்ட இந்த கடையில் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளிப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (நவ.27) இரவு வழக்கம் போல ஊழியர்கள் கடையை பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து, நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வென்டிலேட்டரை கழற்றி, அதன் வழியே கடைக்குள் புகுந்துள்ளனர்.

பின்னர் முதல் மாடி மற்றும் இரண்டாவது மாடிக்குள் இறங்கி, அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான கிலோ கணக்கு தங்க நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று கடையை திறந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த ஊழியர்கள், ஏசி வெண்டிலேட்டர் கழட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் மர்ம நபர்கள் அதன் வழியே புகுந்து, தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றிருப்பதை உணர்ந்து, உடனடியாக இது குறித்து கடை மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அவர் உடனடியாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை மாநகர தெற்கு போலீஸ் துணை கமிஷனர் சண்முகம் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: விமான நிலைய பெண் ஊழியர்கள் வீடுகளில் சோதனை.. ரூ.5 கோடி விலையிலான தங்கம் பறிமுதல் - 4 பேர் அதிரடி கைது!

மேலும், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் ஏசி வென்டிலேட்டரை கழற்றி, உள்ளே புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே கொள்ளை போன நகைகளின் பட்டியல் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மொத்தம் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 தனிப்படை போலீசார் விசாரணையில் களமிறங்கியுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்த விவரங்கள்:

டைம்ண்ட் நகைகள்:

  • 8 மோதிரங்கள்
  • 5 தாலிக்கொடிகள்
  • 5 நெக்லஸ்
  • 3 ஜோடி ஸ்டட்கள்
  • 1 டாலர்

பிளாட்டின நகைகள்:

  • 2 செயின்கள்
  • 12 ப்ரேஸ்லெட்கள்

தங்க நகைகள்:

35 செயின்கள், 7 வளையல்கள், 25 பிரேஸ்லெட்டுகள், 21 நெக்லஸ்கள், 30 கல் பதிந்த நெக்லஸ் நகைகள், 27 தங்க நகைகளுக்கான இணைப்பு பேக் செயின்கள், 4 ஹாரோஸ்கோப் வளையல்கள், 4 டாலர்கள், 18 தாலிகள், 21 மோதிரங்கள், 3 ஜோடி தோடுகள், 2 ஜோடி கல் வைத்த மோதிரங்கள், 1 செயின் (18 கேரட்), 5 பிரேஸ்லட் (18 கேரட்).

இதையும் படிங்க: அரியலூரில் 16 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் தொல்லை.. 36 வயது நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.