ETV Bharat / state

எதற்காக மதுக்கடைகள் திறப்பு? பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் - கோவை மாவட்டம் பொள்ளாச்சி

கோவை: அண்டை மாநிலங்களுக்கு சென்று மது அருந்துவதை தடுக்கவே தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

வெளிமாநிலம் செல்வதை தடுக்கவே மதுக்கடைகள் திறக்கப்படுகிறது

author img

By

Published : May 6, 2020, 1:10 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட சின்னேரிபாளையம், ரங்கம்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அதிமுக சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்பு அவர் பேசுகையில், “அண்டை மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறப்பதற்கு விமர்சனம் செய்யும் ஸ்டாலின் அண்டை மாநிலங்களில் திறக்கப்பட்டது குறித்து பேசினால் அவரது முகத்திரை கிழிந்துவிடும்.

பொதுமக்களுக்கு வரிச்சுமை சுமத்துவதற்காக மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு சென்று மது குடிக்கச் செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சும் நடவடிக்கைகளை தடுக்கவும் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன” என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: குடையுடன் யோகாசனம் செய்யும் மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.