கோயம்புத்தூர்: தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும், சீமானை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி சில தினங்களுக்கு முன சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார்.
அதில் "கடந்த 2011 ஆம் ஆண்டு சீமான் தன்னை திருமணம் செய்து கூறி ஏமாற்றிவிட்டார் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். அதன் அடிப்படையில் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் சென்னை திருமணம் செய்வது செய்து கொள்வதாக சீமான் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து புகார் மனுவை வாபஸ் பெற்ற நிலையில் தன்னை திருமணம் செய்யாமல் சீமான் ஏமாற்றி விட்டதாக புகார் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிற நிலையில் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் சில பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்கு பதிவு செய்து உள்ளதாக தாக்வல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் சம்மன் வழங்குவதற்காக சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் கோவை விரைந்ததாக கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் முடித்துக் கொண்டு சீமான் கோவை வந்துள்ள நிலையில் அவரிடம் சென்னை போலீசார் சம்மன் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சம்மன் வழங்கியவுடன் அவரை கைது செய்யவும் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் உதகையில் இருந்து கோவை வந்த சீமான் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "தேர்தல் காரணமாக நாடே ஒரு பரபரப்புடன் இருக்கிறது. அதனால் என்னை சுற்றியும் ஒரு பரபரப்பு இருக்கிறது. நாளை மறுதினம் சென்னை சென்று விடுவேன்.
அழைப்பானை கொடுப்பது என்றால் அங்கேயே காவல் துறை கொடுத்து விடலாம். என்னைப் பார்த்தால் மிரட்டலுக்கு பயப்படுகின்ற ஆளாக தெரிகிறதா?. பயந்து இருந்தால் இவ்வளவு தூரம் பயணித்திருக்க முடியாது. சட்டப்படி என்றால் சட்டப்படி சந்திக்கலாம். அரசியல் ரீதியாக என்றாலும் அரசியல் ரீதியாக சந்திக்கலாம்.
கைது தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை. ஊடகங்கள் தான் சொல்கின்றன" எனத் தெரிவித்தார். முன்னதாக நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "2011ல் இந்த வழக்கு போடப்பட்டது. இதை சிலரது தூண்டுதலால் வழக்கு கொடுக்கப்பட்டதாக விஜயலட்சுமி கைப்பட எழுதிக் கொடுத்து உள்ளார். சீமான் கைது என சொல்வது முழுக்க முழுக்க வதந்தி. அரசியலில் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று நடக்கிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க்: ராகுலை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய அசோக் கெலாட்: மூன்று வாரங்களில் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!