ETV Bharat / state

"தமிழகத்தில் சினிமா துறையை திமுகவின் குடும்பத்தின் கீழ் வைக்க முயற்சி நடக்கிறது"- எல்.முருகன் - today latest news

Union Minister of State L Murugan: தமிழகத்தில் சினிமாத் துறையை திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கீழ் வைக்க முயற்சி நடக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Union Minister of State L Murugan
தமிழகத்தில் சினிமா துறையை திமுகவின் குடும்பத்தின் கீழ் வைக்க முயற்சி நடக்கிறது - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 9:40 AM IST

கோயம்புத்தூர்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெறும் 'என் மண் என் மக்கள் யாத்திரை' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டெல்லியில் இருந்து கோவை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் தேசிய விருது பெற்றுள்ளனர். இதுவரை இஸ்ரேலில் இருந்து 5 விமானங்கள் மூலம் 1,180 பேர் மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு உக்ரைன், சூடான் போர்களில் சிக்கிய இந்தியர்கள், பிரதமர் முயற்சியால் மீட்டு வரப்பட்டனர். இஸ்ரேலில் உள்ளவர்கள் ஆபரேஷன் அஜய் மூலம் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இஸ்ரேலில் உள்ள 9 ஆயிரம் பேர் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அங்கு உள்ள சூழலை, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சூழலுக்கு ஏற்ப விருப்பப்படுபவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து லியோ திரைப்படத்திற்கு ஏற்படும் சிக்கல்கள் தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், "திமுக குடும்பத்தைச் சேர்ந்த சினிமா நிறுவனங்கள் மட்டுமே படம் எடுக்க வேண்டும், அவற்றை அவர்கள் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் உள்ளனர். சினிமாத் துறையை முடக்க முயற்சிக்கின்றனர். தமிழகத்தில் சினிமாத் துறையை ஒரு குடும்பத்தின் கீழ் வைக்க முயற்சி நடக்கிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆ.ராசாவின் பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான ஏஜென்சி. மக்களுக்கு சேவை செய்யாமல், மக்கள் பணத்தைச் சுரண்டுவது ஆ.ராசாவின் வாடிக்கை. மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த ஒரு திமுக அமைச்சர் சிறையில் இருக்கிறார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. திமுகவினர் மக்களுக்கு சேவை செய்யாமல், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து வருகிறார்கள்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று, வெளிநாடுகளின் எல்லைகளில் மீன் பிடிக்கிறார்கள். மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க கருவிகள் கொடுக்கிறோம். கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறோம். மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க பல வசதிகள் செய்து தந்துள்ளோம். மீன் ஏற்றுமதியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

'என் மண் என் மக்கள் யாத்திரை' மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து பகுதி மக்களும் இந்த யாத்திரைக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த யாத்திரையால் பாஜகவின் வாக்கு சதவீதம் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது" என்றார்.

அதனை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாஜகவை சைத்தான் என விமர்சனம் செய்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "எனக்கு தொண்டை சரியில்லை. இதற்கான பதிலை அதற்கான தலைவர்கள் தருவார்கள்" என கூறியபடி புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: “தமிழகத்தில் உள்ள 11 அமைச்சர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது” - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.