ETV Bharat / state

கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் 3 நபர்கள் மீது வழக்குப்பதிவு! - coimbatore private college issues

கோவை தனியார் கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர், குனியமுத்தூர் காவல்துறையினர்.

கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் 3 நபர்கள் மீது வழக்குப்பதிவு!

author img

By

Published : Jul 5, 2023, 12:50 PM IST

கோயம்புத்தூர்: பாலக்காடு சாலை குனியமுத்தூர் மைல்கல் பகுதியில் பிரபல தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை(ஜுலை 4) சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் ஒப்பந்ததாரர் உட்பட 3 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர், காவல் துறையினர்.

இக்கல்லூரியின் கட்டுமானப் பணிகளில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை கல்லூரியின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சுவர் இடிந்து விழுந்ததில் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கண்ணையன், ஜெகநாதன், நர்கேலா சத்யம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிஸ் கோயாஸ் ஆகிய 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பரூன் கோஸ் என்பவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி பரூன் கோஸ் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: 'மோசமான மருத்துவமனை கட்டடங்கள்; மக்கள் எப்படி வருவார்கள்? 'சுகாதார துறை செயலாளர்க்கு நீதிமன்றம் கேள்வி!

இதனால் இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. இந்த விபத்து குறித்து உயிரிழந்த ஜெகநாதனின் மனைவி கொல்லிடமா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சுற்றுச்சுவர் இடிந்து விழ வாய்ப்பு இருப்பதாக தொழிலாளர்கள் எச்சரித்ததை மீறி, எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பணி செய்ய வைத்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்து இருந்தார்.

இதன் பேரில் கட்டுமான ஒப்பந்ததாரர் சீனிவாசன், பிராஜக்ட் மேனேஜர் சாதில் குல் அமீர், சைட் இன்ஜினியர் அருணாசாலம் ஆகிய 3 பேர் மீது செக்ஸன் 288 மற்றும் 404(2) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், அந்த தனியார் கல்லூரியில் ஆய்வு செய்து வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சார்பில் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தினை குறித்து, கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 'கல்லூரி நிர்வாகத்திற்கு இருமுறை எச்சரித்தும் அதனைப் பற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இரு மாதங்களுக்கு முன்பே கனமழை பெய்த பொழுது மழை நீர் முழங்கால் அளவிற்கு இருந்தது. அதனை அக்கல்லூரிக்கு தெரிவித்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. கம்பி பயன்படுத்தாமல் வெறும் கல்லை மட்டும் வைத்து சுற்றுச்சுவரை கட்டியுள்ளனர்’ எனத் தெரிவித்தார்.

மேலும், கல்லூரியின் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: கல்லூரி சுவர் இடிந்து 5 பேர் உயிரிழப்பு: கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் - துணை மேயர் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.