கோவை மாவட்டம் சூலூர் அருகே ராசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற விவசாயி கடந்த வாரம், நிலத்திற்குப் பட்டா, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் பெற ராசிபாளையத்தின் கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார்.
அங்கு கிராம நிர்வாக அலுவலராக இருந்த விஜயகுமார், சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.8 ஆயிரம் கேட்டதுடன் மட்டுமல்லாமல் தொடர்ந்து 4 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.
![kovai sulur vao caught red handed by getting bribe](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-07-vao-arrested-photo-script-tn10027_28082020221605_2808f_1598633165_960.jpg)
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், சூலூருக்குச் சென்ற லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள், விஜயகுமார் லஞ்சம் பெறுவதை உறுத செய்த பின்னர், அவரை கையும் களவுமாக கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: போலி மதுபானங்கள் தயார் செய்த இருவர் கைது!