கோவை மாவட்டத்தில் நேற்று (ஆக.14) ஒரே நாளில் மட்டும் 385 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்றின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 274ஆக அதிகரித்திருக்கிறது. கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 243 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 48ஆக உயர்ந்தது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: ஒலிம்பிக் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கோவை கல்லூரி மாணவர்!