கோவை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கிருஷ்ணவேணி என்பவர் தலைமை காவலராக பணிபுரிந்துவருகிறார். இவர் புகார் அளிக்க வரும் அனைவரிடமும் பணம் வாங்குவதாகவும், பணம் தரவில்லை என்றால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு வந்த வண்ணம் உள்ளது.
மேலும் காவல் நிலையத்திற்கு வரும் வழக்கறிஞர்கள் அனைவரிடமும் சண்டை போடுவதாகவும் மேலும் புகார் அளிப்பவரையும் அடிப்பதாக குற்றச்சாட்டு இருந்துள்ளது.
இந்நிலையில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த நபரின் நண்பர் ஒருவர் புகார் தொடர்பாக கேள்வி எழுப்பியபோது அந்த நபரை காவலர் கிருஷ்ணவேணி அடித்து காவல் நிலையத்திற்கு உள்ளே இழுத்துச் செல்வதை அங்கிருந்த ஒரு நபர் தனது செல்ஃபோனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
தற்போது அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இருப்பினும் அவர் பேரூர் காவல் நிலையத்திலேயே பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. மேலும் முக்கிய அமைச்சர் ஒருவர் அவரது உறவினர்களுக்கு வேண்டப்பட்டவர் எனக் கூறிக்கொண்டு இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதியினர் பெரும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இதையும் படிங்க: 'ஆத்திரத்தில் அவ்வாறு செய்தேன்'- ஷாரூக் வாக்குமூலம்