தமாகா கட்சியின் மறைந்த தலைவர் ஜி.கே. மூப்பனார் பிறந்தநாள், அக்கட்சியின் கோவை புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில் கொண்டப்பட்டது.
அதனையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்துக்கு ஆரோ குடிநீர், இரண்டு பீரோகள், இரண்டாயிரம் கையுரை, முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சிறுகளத்தை பகுதியில் மரகன்றுகள் நடப்பட்டன. மேலும் பொள்ளாச்சியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அக்கட்சியின் இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்திய குடியரசின் 74ஆவது சுதந்திர தின விழாவையடுத்து தமாகா கட்சியின் கோவை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் ஜி.கே. மூப்பனார் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் மணிகண்டன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திமுகவில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்!