கோயம்புத்தூர்: அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கோவை மாட்டத்தில் நேற்று (டிச.14) மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக நள்ளிரவில் மருதமலை, குனியமுத்தூர் மற்றும் பூண்டி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.
இந்த நிலையில் கோவையின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகமாகி உள்ளது. எனவே கோவை குற்றாலம், தேதி அறிவிப்பின்றி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்ற வானிலை மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை குற்றாலம் மூடப்படுகிறது எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!