ETV Bharat / state

வெள்ளப்பெருக்கு.. ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் - Affecting school going students or children

கோவையில் பாலம் தண்ணீரில் மூழ்கியதால் வனப்பகுதி வழியாக 2 கி.மீ ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் குறித்து பார்க்கலாம்.

காந்தவயல் காந்தையாற்று வெள்ளத்தில் மூழ்கிய பாலம்...மாணவர்கள் ஆபத்தான பயணம்!

author img

By

Published : Aug 30, 2022, 10:53 PM IST

கோவை: தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதியில், மலையடிவார கிராமங்களை நகர பகுதியோடு இணைக்கும் பாலம் நீருக்கடியில் மூழ்கி உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மலையடிவார கிராமங்களான காந்தவயல், காந்தையூர், ஆளூர், உளியூர் என நான்கு கிராம மக்கள் பவானி ஆற்றின் கிளை ஆறான காந்தையாற்றை கடந்தே சிறுமுகை வந்தடைய வேண்டும். பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் அமைந்துள்ள இக்கிராமங்கள் அணையின் நீர்மட்டம் நூறு அடியை கடந்தாலே வெள்ளம் சூழ்ந்து இப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்க தொடங்கி விடும்.

ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

பாலம் இல்லாததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நான்கு கிராம மக்கள் மிகவும் ஆபத்தான முறையில் பரிசல்கள் மூலம் காட்டாறான காந்தையாற்றை கடந்து நகர பகுதிக்கு சென்று திரும்பி வருகின்றனர். விவசாயம், மருத்துவம், கல்வி, வேலை என அனைத்திற்கும் இப்பகுதி மக்கள் லிங்காபுரம் வழியே நகரப் பகுதிக்கு வர வேண்டிய சூழலில், வேறு வழியின்றி இம்மக்கள் பரிசல் பயணத்தையே நம்பி உள்ளனர். இதில் பள்ளி செல்லும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாலம் தண்ணீரில் மூழ்கியதால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கிராமத்தில் இருந்து பரிசல் மூலம் ஆற்றை கடந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக மாணவர்கள் நடந்து சென்று பேருந்து ஏற வேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் தங்களுடைய கிராமம் அடர் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் வனப்பகுதி வழியாக நடந்து செல்வது என்பது மிகவும் ஆபத்தானது என்றும் யானை எப்போது வேண்டுமானாலும் வரலாம் இது போன்ற நிலையில் தங்களுக்கு விரைந்து உயர்மட்ட பாலம் கட்டிக் கொடுத்தால் அனைவரும் பயன்பெற முடியும் என தெரிவித்தனர்.

வருடத்தில் ஒரு சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் குறைவதால் பாலம் வழியாக போக்குவரத்து சேவை இருக்கும் மற்ற நேரங்களில் பரிசலை மட்டுமே இவர்கள் நம்பியுள்ளதால் அரசு இவர்களின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:தென்னை மரத்துடன் போட்டிபோட்டு வளர்ந்த பப்பாளி மரம்... பழந்தின்னிபட்டியில் ஆச்சரியம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.