கோயம்புத்தூர் மாவட்டம் ஆத்துப்பாலத்தில் ஷாகின் பாக் என்ற பெயரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி 10ஆவது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதற்கு கிறிஸ்தவ பாதிரியார்களும் ஆதரவளித்த நிலையில், தற்போதும் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர் உயிரிழந்தவர்களைப் போல் நடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
அப்போது, மாணவர்களின் காலில் உயிரிழந்தவர்களின் பெயர்களை காகிதங்களில் எழுதி கட்டியிருந்தனர்.
இதையும் படிங்க:இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் செய்த கல்லூரி மாணவனிடம் பணம் பறிப்பு