கோவையில் இன்று (ஆக.20) 397 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 558ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 181 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 402ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் இன்று 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது.