கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் 10ஆம் நம்பர் பீடி கம்பெனி செயல்பட்டுவருகிறது. அந்த கம்பெனியில் ஊழியர்கள் கடைகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது போலியான பீடி பாக்கெட்டுகளை விற்க வந்த ஒருவரை கையும் களவுமாக பிடித்து துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் தென்காசியைச் சேர்ந்த சூர்யா என்பதும் தென்காசியில் கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. ஊரடங்கு காரணமாக தென்காசியில் தயாராகும் இந்தப் போலி பீடி கட்டுகளைக் கொண்டு வந்து கோவையில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்துவந்ததாக ஒப்புக்கொண்டார்.
பின்னர் அவரிடம் இருந்து 300 பீடி கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து போலி பீடி விற்ற வழக்கில் காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஐந்து வயது குழந்தைக்கு பாலியில் தொல்லை: கல்லூரி மாணவன் போக்சோவில் கைது