ETV Bharat / state

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் கேஎம்சிஹெச் புதிய மருத்துவனை திறப்பு! - KMCH

கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 750 படுக்கைகளுடன் கூடிய புதிய பொது மருத்துவமனையை அதன் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி திறந்துவைத்தார்.

கேஎம்சிஹெச்
கேஎம்சிஹெச்
author img

By

Published : Oct 25, 2021, 1:03 PM IST

கோயம்புத்தூர்: 750 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கேஎம்சிஹெச் புதிய பொது மருத்துவமனை திறப்பு விழா நேற்று (அக்.24) நடைபெற்றது. இதை கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி திறந்துவைத்தார்.

இந்த விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி, "கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியாக செயல்படும் இம்மருத்துவமனை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளது" என்று தெரிவித்தார்.

750 படுக்கை வசதிகளை கொண்ட இப்புதிய மருத்துவமனையில் 50 படுக்கைகள் பல்வேறு தீவிர சிகிச்சை பிரிவுகளுக்ககாக ஒதுக்கப்பட்டுள்ளன. 30 படுக்கைகள் அவசர கால மற்றும் விபத்து சிகிக்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 11 ஆபரேஷன் தியேட்டர்கள் செயல்படவுள்ளன.

இதையும் படிங்க: மீண்டு(ம்) மிரட்டும் ஜிகா.. விமான படை அலுவலர் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.