ETV Bharat / state

கருப்பு பணம் என காகித கட்டு கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர் கைது - Kerala Person involved in fraud in coimbatore

பொள்ளாச்சியில் காகித கட்டுகளை கொடுத்து மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கருப்பு பணம் என காகித கட்டுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

author img

By

Published : Aug 19, 2022, 10:59 AM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஒடையகுளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இவரது செல்போனில் பேசிய கேரளா மாநிலம் மேனம்பாறையை சேர்ந்த சண்முகம் (62) என்பவர், தன்னிடம் கருப்பு பணம் இருப்பதாகவும் ஒரு தொகை கொடுத்தால் இரு மடங்கு தொகையாக கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய ராஜேந்திரன், கிணத்துக்கடவு அருகே முள்ளுப்பாடி பகுதியில் காத்திருந்த சண்முகத்திடம் 25,000 ரூபாய் பணத்தை கொடுத்ததற்கு 50,000 ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். கடந்த 9 ஆம் தேதி மீண்டும் ராஜேந்திரனுக்கு செல்போன் மூலம் பேசிய சண்முகன், 5 லட்சம் ரூபாய் பணம் கொண்டு வந்தால் 10 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய ராஜேந்திரன், 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ராஜேந்திரன் கொண்டு வந்த 5 லட்சம் பணத்தை சண்முகனிடம் கொடுத்துள்ளார். இதற்கு பதிலாக பெரிய பிளாஸ்டிக் கவரில் 10 லட்சம் பணம் இருப்பதாக கூறி சண்முகம் ராஜேந்திரனுக்கு கொடுத்துள்ளார்.

பின்னர் வீட்டில் சென்று பிளாஸ்டிக் கவரை பிரித்து பார்த்தபோது, பணத்துக்கு பதிலாக கட்டுக்கட்டாக வெற்று காகித கட்டுகள் இருந்ததைக் கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில், கிணத்துக்கடவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து மோசடி செய்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில் கோவை மதுக்கரை பகுதியில் சண்முகம் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவரிடமிருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், சண்முகத்தை கைது செய்தனர். பின்னர் சண்முகத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், சண்முகம் பல்வேறு பகுதிகளில் பணம் மோசடி செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: நிதி நிறுவன கொள்ளை வழக்கு... தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் சரண்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.