கோவையில் விமான நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் 143ஆவது மன்னம் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் கேரள மாநில பாஜக எம்.பி.யும் நடிகருமான சுரேஷ் கோபி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஆச்சரியா ஸ்மிரித்தி என்ற மன்னத்து பத்மநாபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் விழாவில் பேசிய சுரேஷ்கோபி, இந்த மன்னம் ஜெயந்தி விழாவானது தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.