கோவை: வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். இவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று(மார்ச் 19) ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டு, அங்குள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்தினார்.
நேற்றைய தினம் அதிமுக செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம் செய்தியாளர்களை சந்திக்கும்பொழுது, கார்த்திகேய சிவசேனாபதி அவர் தொகுதி என்னவென்றே தெரியாமல் வேறு ஒரு தொகுதிக்குள் சென்று வாக்குகளை சேகரித்து வருவதாக விமர்சித்த நிலையில், இன்று அவர் தொகுதியை விடுத்து கோவை தெற்கு தொகுதிக்குள் நடைப்பயிற்சி மேற்கொண்டு மக்களை சந்தித்து வருவதாக அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
இதற்குப் பதிலளித்த திமுகவினர், நடைப்பயிற்சி எந்த இடத்தில் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் என்றும்; நல்ல மனிதருக்கு அனைத்து இடங்களிலும் மரியாதை கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.