ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் சோதனை! - Lokayukta Police raid in pynthamil pari house

Karnataka Lokayukta Police raid: திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளர் பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை
திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளர் பைந்தமிழ் பாரி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 2:10 PM IST

Updated : Dec 21, 2023, 2:20 PM IST

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ் பாரி

கோயம்புத்தூர்: தமிழக முன்னாள் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகனான பைந்தமிழ் பாரி வீட்டில், இன்று(டிச.21) கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் கிருஷ்ணா காலணியில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகனும், திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளருமான பைந்தமிழ் பாரி வீட்டில், 15 பேர் கொண்ட கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

கர்நாடகாவில் பைந்தமிழ் பாரி மற்றும் அவரது தந்தை பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் கல்குவாரி வைத்து தொழில் செய்து வரும் நிலையில், கல்குவாரி முறையாக நடத்தாமல் விதிமுறைகளை மீறி செயல்படுத்தி உள்ளனர் என கூறப்படுகிறது. இதனால், கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனையை மேற்கொண்டு சென்றுள்ளனர். மேலும், அவர்கள் தற்போது மீண்டும் நடந்து வந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கழுத்தளவு வெள்ளம்.. 39 மணிநேரம் மரத்தின் மீது அமர்ந்து உயிர் தப்பிய விவசாயி.. ஈடிவி பாரத் உடன் பகிர்ந்த பகீர் நிமிடங்கள்!

Last Updated : Dec 21, 2023, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.