கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,” மின்தடையை ஏற்படுத்தி பணப்பட்டுவாடா செய்கிறார்கள். ஒரு ஊழல் கட்சிக்கு மாற்றாக இன்னொரு ஊழல் கட்சியை தேர்ந்தெடுப்பது தவறு. கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை ஒப்பீட்டு பார்த்து வாக்களியுங்கள். கை நீட்டி பணத்தை வாங்கினால் திரும்பி கேள்வி கேட்க முடியாது. மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை இனி தமிழ்நாடு அரசியலில் இருந்து அகற்ற முடியாது.
நாட்டின் எல்லையை காப்பது மட்டும் தேசபக்கி கிடையாது. நம்முடைய வீட்டையும், பக்கத்து வீட்டையும் மதித்து பாதுகாப்பதும் தேச பக்தி தான். பக்கத்து வீடு எரியும் போது என் வீடு பாதுகாப்பாக இருந்தால் போதும் என நினைப்பது தேசபக்தி அல்ல ”எனத் தெரிவித்தார்.